மாலைதீவு பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மாலைதீவு பிரஜை ஒருவர் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இந்நிலையில் குறித்த மாலைதீவு பிரஜைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
265 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மாலதீவு பிரஜையான லத்தீப் இஷுன் என்பவருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திலகரத்ன இத்தீர்ப்பை விதித்துள்ளார்.
இவருடன் கைது செய்யப்பட்ட மற்றொரு சந்தேக நபரை நிரபராதியாகக் கருதி விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.