மகனைக் கடத்திச் சென்ற தந்தை பொலிஸாரால் சுட்டுக்கொலை!
தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்த 7வயது மகனைக் கடத்திச் சென்ற தந்தை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வெல்லம்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தனது மகன் இருந்த பாட்டி வீட்டிற்கு வந்த சந்தேகநபர் T56 துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தனது மகனைக் கடத்திச் சென்றுள்ளார். வெல்லம்பிட்டி பகுதியில் சந்தேகநபருக்கும் பொலிஸாருக்குமிடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குறித்த சந்தேகநபர் கொலை உட்பட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்னர் தனது மனைவியின் கை, கால்களை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.இதனால் மனைவி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது