மாடு முட்டியதில் எட்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!
யாழ் மண்கும்பான் பகுதியில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் மண்கும்பான் 4ம் வட்டாரத்தினைச் சேர்ந்த நல்லையா கணேஸ்வரன் எனும் 62 வயதான 8 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
மண்கும்பான் பிள்ளையார் கோயில் பாதுகாவலராக பணியாற்றும் முதியவர் கடந்த 29 ம் திகதி ஆலயத்திற்கு சொந்தமான மாட்டினை கட்டுவதற்கு முற்பட்ட போது மாடு முட்டியதில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.