எவ்வளவு அழகானவராக இருந்தாலும் உதடுகள் கருமை நிறமாக, தோல் உரிந்து காய்ந்த நிலையில் காணப்பட்டால் அழகைக் குறைத்தே காட்டும். அதனால் தான் உதடுகளை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
கருமை நிறமாகவும் பொலிவிழந்து காணப்படும் உதடுகளை அழகாக மாற்றுவது எப்படி? என்று பார்ப்போம்.
*பீட்ரூட் சாறு இரண்டு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு கால் தேக்கரண்டி, நாட்டுச்சக்கரை 3 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி, இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து ஒரு கண்ணாடிக் குப்பியில் காற்று புகாதவாறு மூடி குளிர்சாதனப்பெட்டியில் பாதுகாக்கவும். இதனை தினமும் இரண்டு முறை தடவி வந்தால் உதடுகள் மென்மையாகவும் சிவப்பாகவும் மாறும்.
*பன்னீர் ரோஜா இதழ்கள் 20 கிராம்(அரைத்தது) பசுவின் பால் ஒரு தேக்கரண்டி ஆகிய இரண்டையும் நன்றாகக் கலந்து தினமும் உதடுகளின் மேல் தடவி வந்தால் அவை சிவப்பாக காட்சியளிக்கும்.
*சிறிது கஸ்தூரி மஞ்சளுடன் பசுவின் பால் கலந்து பூசி வந்தால் உதடுகள் பளபளப்பாகவும் சிவப்பாகவும் மாற்றமடையும்