இலங்கையில் கட்டாயமாகிறதா கடுமையான கட்டுப்பாடுகள்!
இலங்கையில் கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சீனாவில் புதிதாக கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து இலங்கையில் கொரோனா தொற்று நிலைமை குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
எனினும் புதிய கட்டுப்பாடுகள் வழிமுறைகள் குறித்து விசேட சுற்றுநிரூபம் எதனையும் வெளியிடவில்லை எனினும் முகக் கவசங்களை அணிய வேண்டும் என்ற செய்தியை தொடர்ச்சியாக தெரிவிக்க வேண்டியுள்ளது.
நாடளாவிய ரீதியில் சில விடயங்களை பின்பற்ற வேண்டும். ஆனால் அவை கட்டாயம் இல்லை. பாதிப்புகள் மற்றும் பலாபலன்கள் குறித்து ஆராய்ந்த பின்னரே புதிய நடைமுறைகளை முன்னெடுக்க வேண்டும்.
புதிய நடைமுறைகளை பின்பற்றுவதா இல்லையா என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். நாங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் சமூகம் மற்றும் அரசாங்கத்தின் மீது தாக்கத்தை செலுத்தும்.எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முன்னர் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு மற்றும் பலன்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் கட்டாயமாகிறதா கடுமையான கட்டுப்பாடுகள்..! வெளியான தகவல்
எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முன்னர் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு மற்றும் பலன்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.