தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி! யாழில் முன்மாதிரி!
யாழ்ப்பாணத்தில் புதுமணத் தம்பதிகள் திருமணம் முடிந்தவுடன் நேராக தியாகி லெப் கேணல் திலீபன் அண்ணாவின் நினைவிடத்திற்கு சென்று ஆசி பெற்ற சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.
ஆசிரியரான விவேகானந்தா தமிழ் ஈசன் போசிந்தா தம்பதியே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
விடுதலை உணர்வுகளை அழித்துவிடலாம் மக்களின் மனங்களில் இருந்து அவர்களை நீக்கிவிடலாம் என்று எண்ணியவர்களின் கனவுகளை இந்த புதுமணத் தம்பதிகளின் செயற்பாடு சிதைத்துள்ளதாக இணையத்தில் பரவலாக கருத்து பகிரப்பட்டு வருகிறது.
பரவலாக வாழ்த்துக்கள் பரிமாறப்படும் இந்த தம்பதிகளுக்கு எமது news1sttamil இணையத்தளமும் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறோம்.