ஒரே நாளில் அவுஸ்திரேலியாவுக்கான விசா!
விடுமுறைக்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலாப்பயணிகளாக வந்து பணிபுரிய வழிவகை செய்யும் working holidaymaker/backpacker விசா விண்ணப்பங்கள், இப்போது ஒரே நாளுக்குள் பரிசீலிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே கிடைத்துள்ள விசா விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிப்பதற்குரிய நடவடிக்கைகளையும், பரிசீலனை முன்னுரிமை நடைமுறையையும் ஆஸ்திரேலிய அரசு மாற்றியமைத்ததையடுத்து இது சாத்தியமாகியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் காலப்பகுதியில் 120,000 க்கும் மேற்பட்ட கடல்கடந்த backpackersக்கு ஏற்கனவே working holidaymaker (subclasses 417 & 462) விசா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
working holidaymaker விசாவில் வருபவர்கள், ஆறு மாதங்களுக்குப் பதிலாக, அதிகபட்சமாக 12 மாதங்களுக்கு ஒரே முதலாளியுடன் பணிபுரியலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இந்தச் சலுகை டிசம்பர் 31 அன்று காலாவதியாக இருந்தபோதிலும், 30 ஜூன் 2023 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு அரசு இதனை நீட்டித்துள்ளது.
இதையடுத்து இந்த ஆண்டு கிறிஸ்மஸ் காலப்பகுதியில் 120,000 க்கும் மேற்பட்ட கடல்கடந்த backpackersக்கு ஏற்கனவே working holidaymaker (subclasses 417 & 462) விசா வழங்கப்பட்டுள்ளது.