யாழில் மோட்டார் சைக்கிள் -டிப்பர் விபத்து!
யாழ் செம்மணி வளைவில் மோட்டார் சைக்கிள் டிப்பர் விபத்துச் சம்பவம் ஒன்று இன்று நிகழ்ந்துள்ளது.
செம்மணி வீதியால் பயணித்து A9 வீதியில் ஏறுவதற்கு முற்பட்டவரை யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த டிப்பர் மோதியுள்ளது. குறித்த விபத்தால் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்ததுடன் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.