இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த ஜனாதிபதியால் நீக்கம்!
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவின் அமைச்சுப் பதவி ஜனாதிபதியால் உடன் அமுலுக்கு வரும் வரையில் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசை விமர்சித்தமையே பதவி பறிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. சந்தை ஒன்றில் அரசை விமர்சித்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்து 24 மணி நேரத்தினுள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.