கடலில் முதலை தாக்கியதில் சுழியோடி உயிரிழப்பு!
தெஹிவளைக் கடலில் முதலை தாக்கியதில் சுழியோடி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வளர்ப்பு மீன்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போத முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.இரத்மலானை புகையிரத நிலைய குடியிருப்பில் வசிக்கும் 58 வயதான குடும்பஸ்தரே முதலையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
முதலையின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.