இந்திய மற்றும் யாழ் மீனவர்களுக்கிடையில் கடலில் முறுகல்!
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி மற்றும் சட்டவிரோத மீன்பிடி அதிகரித்துச் செல்லும் நிலையில் யாழ் மீனவர்களினால் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் யாழ் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வடமராட்சி மீனவர்கள் இருவர் இந்திய இழுவை மீன்பிடி படகுகளால் மோதி மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கடலில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவை மீன்பிடி படகை தடுக்க முற்பட்ட வடமராட்சி மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து இந்திய மீனவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்திய மீனவர்களினால் தொடர்ச்சியாக அத்துமீறல், சொத்தழிவு, கடல் வளங்கள் அழிவு தற்போது உயிரிழப்புகளும் ஏற்படுவதாகவும் இதனைக் கட்டுப்படுத் வலியுறுத்தி வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதியில் போக்குவரத்தினை முடக்கி தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.