முல்லைத்தீவு மல்லாவி வவுனிக்குளத்தில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மல்லாவியில் வசிக்கும் உறவினரின் மரண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற சகோதரர்களே உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம் நேற்றைய தினம் நிகழ்ந்துள்ளது.
குளத்தின் பிரதான வாய்க்காலில் நீராடிய இளைய சகோதரன் நீரில் மூழ்குவதை அவதானித்த மூத்த சகோதரன் அவரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சியில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் யமுனா வீதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சுமன்(27), ரவிச்சந்திரன் சரேஷ் (16) ஆகிய சகோதரர்களே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஒருவருக்கு நேற்றைய தினம் பிறந்தநாள் என தாயார் கதறி அழுதார்.
இருவரின் சடலங்களும் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.