சிறிலங்காவின் சுதந்திரதினம் தமிழர் தேசத்தின் கரிநாள்!
“சிறிலங்காவின் சுதந்திரதினம் தமிழர் தேசத்தின் கரிநாள்” என சிவில் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிரான நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக நினைவு முற்றத்தில் பொதுச்சுடரும் ஏற்றப்பட்டது.
இன்று இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து பல்கலைக்கழக வாயிலில் கறுப்புக்கொடிமாணவர்களால் கட்டப்பட்டது.
யாழ் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து முனியப்பர் கோவில்வரை சுதந்திரதினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டது. முல்லைத்தீவு பகுதியிலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.