கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரிட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது!
கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நாளை (10) முடிவடையும் நிலையில் எதிர்வரும் 17ம் திகதிவரை விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் முகவரியிலோ உள்நுழைந்து விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.