யாழில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் இருவர் கைது!
யாழ்ப்பாணம் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழாலைப் பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சகோதரர்கள் இருவர் ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே சகோதரர்களான இளைஞர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுண்ணாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.