விபத்தில் சிக்கி தந்தை பலி. மகன் படுகாயம்!
மட்டக்களப்பு கல்லடி பகுதியில் நிகழ்ந்த விபத்தில் தந்தை பலி. மகன் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத் துயரம் நேற்று சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகனை பிக்கப் வாகனம் ஒன்று மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
பிக்கப் வாகனத்துடன் மோதுண்டு நெல் அறுவடை செய்யும் கனரக வாகனத்தில் சிக்கியதில் தந்தை தலை நசுங்கி உயிரிழந்துள்ளார். மகன் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விபத்துக்கு காரணமான பிக்கப் வாகனத்தை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.