அவுஸ்திரேலிய கடலில் மூழ்கி யாழ் இளைஞன் உயிரிழப்பு!
அவுஸ்திரேலியாவில் கடலில் நீராடிய இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழப்பு. மிக ஆபத்தான கடல் பகுதியில் நீராடிய நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சொந்த முகவரியாகக் கொண்ட செல்வராசா சிறீபிரகாஸ் எனும் 29 வயதான இளைஞனே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கடல்ப்பகுதி ஆபத்தான பகுதியாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. இக்கடல் பகுதி தொடர்ச்சியாக கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதுடன் ‘சுறா ‘ தாக்குதலும் அதிகமாக நிகழும் பகுதியாக காணப்படுகிறது. இவ்வருடம் இதுவரை குறித்த கடல் பகுதியில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.