நீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு!
தெனியாய பல்லேகம சத்தமலை நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து தந்தை மகன் உயிரிழப்பு. புகைப்படம் எடுக்க முயன்றபோது நேர்ந்த துயரம்.
நீர்வீழ்ச்சியில் மகனை புகைப்படம் எடுக்க முயன்றபோது மகன் தவறி நீர்வீழ்ச்சியில் வீழ்ந்துள்ளார். மகனைக் காப்பாற்ற தந்தையும் நீர்வீழ்ச்சியில் குதித்துள்ளார். இந்நிலையில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் காலி ஜின்தோட்டையைச் சேர்ந்த மொகமட் தாஹிர் மொகமட் மன்ஸார் (48) எனும் தந்தையும் மொகமட் மொஹீர் (16) எனும் மகனுமே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்பதற்கு கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.