யாழ் இந்துக்கல்லூரி மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
காரைநகர் கசூரினா கடலில் நீராடிய யாழ் இந்துக்கல்லூரி மாணவன் கடலில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு. இச்சம்பவம் புதுவருடப்பிறப்பு தினமான நேற்றைய தினம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் யோகராசா லோகீஸ்வரன் எனும் 17 வயதான யாழ் இந்துக்கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளார்.
கோண்டாவில் பகுதியிலிருந்து 20 பேரளவில் கசூரினா கடற்கரைக்கு சுற்றுலா சென்ற நிலையில் நீராடியுள்ளனர். இருவர் அலையில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மற்றையவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து நான்கு மணி நேரமாக மேற்கொண்ட தேடுதலில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.