விபச்சார விடுதி சுற்றிவளைப்பட்டதில் மூவர் கைது!
விபச்சார விடுதி ஒன்று சுற்றி வளைக்கப்பட்டதில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கண்டியில் மசாஜ் நிலையம் எனும் பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதியே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டு விடுதியை நடாத்தியவர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த விடுதியில் நீண்ட காலமாக விபச்சாரம் இடம்பெற்று வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்தே சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விடுதியின் உரிமையாளர் மற்றும் 27,28 வயதான யுவதிகள் இருவர் என மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்விடுதியில் பெண்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடுதி கண்டியிலுள்ள பிரபல விடுதி ஒன்றிற்கு அருகில் உள்ள வீடொன்றில் இயங்கிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.