ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டில் மீண்டும் தற்கொலைக்குண்டுத்தாக்குதல் என அபாய எச்சரிக்கை
2024ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் போன்றதொரு தாக்குதல் மீண்டும் நடத்தப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரோரா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதுடன், அவர் மேலும் கூறியுள்ளதாவது,
‘2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்கள் யாரேனும் தலைமறைவாக இருந்தால், அவர்கள் விரைவில் கைதுசெய்யப்பட வேண்டும். அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதித்தால் 2024ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலை இலக்காகக் கொண்டு இன்னொரு குழப்பத்தை உருவாக்கலாம்’ என்றும் அவர் எச்சரித்துள்ளார்.