செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி யவர் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே பல ரசிகர்கள் இவரின் அழகில் மயங்கி கிடந்தனர்.
விஜய் ரீவியில் ஒளிபரப்பாகிய ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பின்னர் ‘மேயாத மான்’ திரைப்படத்தில் திரையுலகுக்குள் காலடி வைத்தார். ‘கடைக்குட்டி சிங்கம், கசட தபற, மாஃபியா, ஓ மணப் பெண்ணே போன்று பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இன்றும் கைவசம் பல திரைப்படங்கள். பிசியான நேரத்திலும் பிரியா பவானி சங்கர் மாடன் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.