மூன்று நாட்களாக காணாமல் போனவர் சடலமாக மீட்பு! யாழில் துயரம்!
மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கானை மண்டிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாதகலைச் சேர்ந்த கடம்பன் எனும் 38 வயதான தனியார் பேரூந்து உரிமையாளரே சங்கானை ‘மண்டிகை’ குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்தார் என இளவாலை பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சங்கானை மண்டிகை குளத்திலிருந்து இன்று மாலை குறித்த உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.