உயிரிழந்த மாணவிக்கு கொரோனா, பலர் தனிமைப்படுத்தல்!
சியம்பலாவ பகுதியில் காதலனுடன் ஏற்பட்டமுரண்பாட்டையடுத்து தற்கொலை செய்த மாணவிக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
செஹானி செவ்வந்தி எனும் 15 வயதான மாணவி காதலனுடன் தொலைபேசியில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து கிணற்றில் குதித்து உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் கடந்த 29ம் திகதி நிகழ்ந்துள்ளது.
அவரது சடலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாணவி கல்வி கற்ற பாடசாலையிலும் மேலும் சில மாணவிகளுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுது மாணவியின் நெருங்கிய உறவினர்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.