குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது!
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தர்மபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு தர்மபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மீட்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.