புத்தளம் சேகுவந்தீவு பகுதியில் மாமனாரைத் தாக்கி கொலை செய்த மருமகன் கைது!
புத்தளம் சேகுவந்தீவு பகுதியில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையே மதுபோதையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக மாமனார் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
புத்தளம் சேகுவந்தீவு தழுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதான குடும்பஸ்தரே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் புதுவருட தினத்தன்று குழு மோதலில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டு நேற்று முன்தினம் பிணையில் விடுதலையாகியுள்ளார். இது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே குறித்த கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.