புகையிரதத்துடன் மோதுண்டு பொறியியலாளர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பேலியகொட புகையிரத கடவையில் நிகழ்ந்துள்ளது. புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வத்தளையைச் சேர்ந்த 55 வயதான பொறியாளர் பிரியந்த பெர்னான்டோ என்பவரே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். புகையிரதக் கடவை சமிக்ஞை விளக்குகள் ஒளிர்ந்தபோதும் கடவையைக் கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தையடுத்து கார் தீப்பற்றி எரிந்துள்ளது. பொறியியலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.