வாள்வெட்டுத் தாக்குதலில் குடும்பஸ்தர் படுகாயம்!
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முள்ளியவளை முறிப்பு பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரம் புவனேந்திரராசா (42) என்பவர் மீது வீடுபுகுந்து வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை தாக்குதலை மேற்கொண்டவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.