ஒருதலைக் காதலால் ஏழு பேர் மீது வாள்வெட்டு!
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட ஏழுபேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
இளைஞன் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்ததாகவும் குறித்த யுவதி விருப்பமில்லை என மறுத்தும் தொடர்ச்சியாக பின்தொடர்ந்தது தொல்லை செய்து வந்ததால் இரு தரப்பினருக்கிடையில் முன்னரும் முரண்பாடு ஏற்பட்டு பொலிஸாரது தலையீட்டை அடுத்து சமாதானமாக சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை ஒருதலைக் காதல் மன்மதன் தனது குழுவினருடன் சென்று யுவதியின் உறவினர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியதில் பெண் ஒருவர் உட்பட ஏழுபேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.