உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிக்கன் சூப்.
கோழி இறைச்சி எலும்புடன் _ 1/2 கிலோ
சின்ன வெங்காயம் _ 50 கிராம்
மிளகுத்தூள் _ 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் _ 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்_ 25 கிராம்
தக்காளி _ 2
இஞ்சி_ சிறிய துண்டு
பூண்டு _ ஒரு முழுப் பூண்டு
மிளகாய்த்தூள் _ 2 தேக்கரண்டி
மல்லித்தூள் _ 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் _ 1/2 தேக்கரண்டி
கறுவாப்பட்டை _ சிறு துண்டு
கருவேப்பிலை _ சிறிதளவு
உப்பு, எண்ணெய், எலுமிச்சை சாறு _ மூன்றும் தேவையான அளவு
செய்முறை
கோழி இறைச்சியை துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சி, பூண்டை இரண்டையும் சேர்த்து அரைத்து வைத்திருக்கவும். தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயத்தை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும் நறுக்கிய வெங்காயத்தையும் கறுவாப் பட்டையையும் போட்டு தாளித்து வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் தக்காளி பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். எல்லாம் நன்றாக வதங்கியதும் மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் கோழி இறைச்சியை தேவையான அளவு உப்பு சேர்த்து கொட்டி கிளறி நன்றாக வேக வைக்கவும்.
அனைத்தும் நன்றாக கொதித்ததும் எலுமிச்சை சாறு தேவையான அளவு சேர்த்தால் சுவையான , ஆரோக்கியமான சிக்கன் சூப் ரெடி.