இதய நோய்களையும்,தொப்பை வயிறையும் அடித்து விரட்டும் பூண்டு!
நீண்ட ஆயுளோடும் தேக ஆரோக்கியத்துடனும் வாழ இயற்கை கொடுத்த அருமருந்து ‘பூண்டு’
பூண்டினை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் பூண்டு சாப்பிட்டும் பயன் இல்லை என்று கூறுபவர்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு பயன்படுத்தினால் தான் முழுமையான நன்மைகளை அனுபவிக்க முடியும்.
இதய நோய்களான ரத்தக்குளாய் அடைப்பு, மாரடைப்பு, பை பாஸ், போன்ற இதய நோய்கள். கெட்ட கொழுப்புகளை கரைக்க, தொந்தியைக் கரைத்து நேர்த்தியான உடலமைப்பை பெற்றுக்கொள்ள பூண்டினை சரியான முறையில் பயன்படுத்திவிட்டு பயனைக் கூறுங்கள்.
உண்மையில் பூண்டினை சமைத்து உண்பதால் எதிர்பார்த்த பயனைப் பெற்றுக்கொள்ள முடியாது. பச்சையாக அப்படியே பயன்படுத்த முயற்சித்து பூண்டின் அமிலத் தன்மையால் பயன்படுத்துவதை தவிர்த்தவர்களே அதிகம்.
சமைத்தால் பூண்டின் மருத்தவ தன்மை கெட்டுவிடும். பூண்டினை சிறு சிறு துண்டுகளாக கடித்து உமிழ் நீரோடு விழுங்குவதே சரியான முறை.
1* பத்து முழு பூண்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி துணியில் பரப்பி 12 மணி நேரம் நிழலில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2* ஐந்து எலுமிச்சை பழங்களின் சாற்றினைப் பிழிந்து ஒரு கண்ணாடி போத்தலில் எடுத்துக்கொள்ளுங்கள்.
3* எலுமிச்சை சாற்றினுள் நறுக்கி வைத்துள்ள பூண்டு துண்டுகளை போட்டு அதற்குள் பூண்டு துண்டுகள் மூழ்கும் அளவு சுத்தமான தேன் ஊற்றி 50 நாட்கள் ஊறவைத்து எடுக்க வேண்டும்.
50 நாட்கள் ஊறவைத்து பின் காலை மாலை 1/2 தேக்கரண்டியளவு ருசித்து ரசித்து சாப்பிட வேண்டும். சுவை வேற லெவலில் இருக்கும். ஆறு மாதத்திற்கு ஒரு தடவை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர தேக ஆரோக்கியத்தில் ஏற்பட்ட மாற்றம் உங்களுக்கு நன்கு தெரியும். தொப்பை காணாமல் போயிருக்கும்.
குறிப்பு_ இது போன்ற பயனுள்ள தகவல்களை உங்கள் உறவுகளும் அறிந்துகொள்ள பகிர்ந்து கொள்வதுடன் எமது இணையத்தளத்தின் பேஸ்புக் பேஜை ‘லைக்’ செய்து தொடர்ந்தும் இணைந்திருங்கள்.