பரந்தனில் இளைஞன் குத்திக் கொலை! மற்றொருவர் படுகாயம்!
பரந்தனில் இரு பகுதியினருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளைஞன் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பரந்தன் சந்தி புதுக்குடியிருப்பு வீதியில் புதுவருடப் பிறப்பான நேற்றைய தினம் இரவு ஏழு மணியளவில் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் பரந்தன் 13 ம் வீதியைச் சேர்ந்த 24 வயதான கார்த்திக் என்பவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.
உயிரிழந்தவரிற்கும் சந்தேக நபரிற்கும் நேற்றைய தினம் காலை தொடக்கம் முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவரது நன்பர் ஒருவரைத் தாக்குவதாக கிடைத்த தகவலையடுத்து உயிரிழந்தவர் சம்பவ இடத்திற்கு சென்ற போது கொலைச் சந்தேக நபர் போத்தல் ஒன்றினை உடைத்து குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
தடுக்கச் சென்ற மருமகன் மீதும் சந்தேக நபர் போத்தலால் குத்தியுள்ளார்.இதன் காரணமாக மருமகன் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.