இஸ்ரேல் அத்துமீறிய யூத குடியேற்றம். பலஸ்தீனர்கள் எதிர்ப்பு!
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனம் மேற்குகரையில் அமைக்கப்படும் யூதக் குடியேற்றத்திற்கு எதிராக பலஸ்தீனர்கள் போராட்டம்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேற்றத்திற்கு எதிராக பலஸ்தீனர்கள் போராட்டம் நடாத்திய தில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் பலஸ்தீன இளைஞர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டுள்ளது.யூத குடியேற்றம் மற்றும் பாலஸ்தீன இளைஞர்கள் கைதுசெய்யப்படுவதை கண்டித்தும் தொடர்ந்தும் போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை மேற்குக்கரை அகதிகள் முகாமில் இஸ்ரேலிய இராணுவத்தினரால் பலஸ்தீன 21வயதான இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.