முல்லைத்தீவில் காவாலிகளால் பெண்ணிற்கு நேர்ந்த துயரம்!
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் மீது காட்டுப்பகுதியில் வழிமறித்து இரசாயன திரவத்தினால் தாக்குதல். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பணி முடித்து கொக்காவில் துணுக்காய் வீதியில் உள்ள வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் காட்டுப்பகுதியில் நின்ற இருவர் இரசாயன திரவம் என சந்தேகிக்கப்படும் திரவத்தினை முகத்தில் வீசியுள்ளனர்.
இதனால் பார்வை பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் தஞ்சம் அடைந்துள்ளார். பின்னர் நோயாளர் காவுவண்டி ஊடாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் பார்வைக்கோளாறு காணப்பட்டதால் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.