கஜகஸ்தானில் களமிறங்கியது ரஷ்ய இராணுவம்! அமெரிக்கா அதிருப்தி!
கஜகஸ்தானில் எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்பட்ட எதிர்ப்பு போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டமாக மாறி கஜகஸ்தானில் வன்முறைகள் அதிகரித்துள்ளது. இதனையடுத்து கஜகஸ்தான் பிரதமர் பதவி விலகியுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி அவசரகால நிலையை பிரகடனப் படுத்தியதுடன் போராட்டக்காரர்களை கண்ட இடத்தில் சுடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் 2500 ரஷ்ய இராணுவத்தினர் கஜகஸ்தானில் களமிறங்கியுள்ளனர். கஜகஸ்தான் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அமைதியை நிலைநாட்ட ரஷ்ய படைகள் கஜகஸ்தானில் தரையிறங்கியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டனி பிளிங்கன் கஜகஸ்தான் போராட்டக் காரர்களின் உரிமைகளை கஜகஸ்தான் மதிக்க வேண்டும். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் வலு கஜகஸ்தான் இராணுவத்திடம் உள்ளதாக தாம் எண்ணுவதாகவும் ஏன் ரஷ்ய இராணுவம் அழைக்கப்பட்டது என்பது தொடர்பில் தெரியவில்லை. நாம் ஆராய்ந்து வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.