நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்!
நாம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம். கொரோனா தொற்று காரணமாக முழு உலகமும் நெருக்கடியில் உள்ளது. ஆயினும் அரசாங்கம் என்ற ரீதியில் அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை அரசாங்கம் சிறந்த முறையில் கட்டுப்படுத்தியது, அது தொடர்பில் எதிர்க்கட்சி கதைப்பதில்லை. கொரோனாவால் முழு உலகமும் நெருக்கடியில் உள்ளது. ஆயினும் சவால்களை வெற்றிகொண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.