தெலுங்கு திரையுலக பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நடித்து மிகப்பெரிய வெற்றிப் படமாக சாதனை படைத்து வருகிறது ‘புஷ்பா’ .
புஷ்பா படத்தில் வரும் “சாமி சாமி” சமந்தாவின் கவர்ச்சிக் குத்தாட்டத்தில் வெளியாகிய “ஓ….சொல்றியா மாமா ஓ ஓ.. சொல்றியா” பாடலும் விமர்சனங்களைத் தாண்டி வைரலாகி வருகிறது.
புஷ்பா படத்தில் கதாநாயகனும் வில்லனும் நிர்வாணமாக சண்டை போடுவது போல் காட்சி படமாக்க இருந்ததாகவும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டதால் அந்த காட்சியை தவிர்த்ததாகவும் தெரிவித்திருக்கிறார் புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார்.
“சமந்தா.. ரஷ்மிகா கவர்ச்சி போதாதென்று அல்லு அர்ஜுனையும் கவர்ச்சியா காட்ட யோசிச்சியா” என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.