அண்ணியுடன் தகாத உறவு, நேர்ந்த துயரம்!
கணவரின் தம்பியுடன் தகாத உறவில் இருந்ததால் இரண்டு பிள்ளைகளின் தாயான குடும்பத் தலைவிக்கு நேர்ந்த துயரம்.
சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த பிரபு மஞ்சு என்பவரைத் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2017 வேலைக்காக மத்திய கிழக்கு நாடொன்றிற்கு சென்றுள்ளார்.
கணவர் வெளிநாடு சென்ற நிலையில் கணவரின் பெற்றோர் சகோதரர்களுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் மஞ்சுவிற்கு கணவரின் தம்பியுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் வெளியிடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த பிரபு மனைவி பிள்ளைகளுடன் அயல் கிராமம் சென்று தனியாக வசித்து வந்துள்ளார். கணவரின் தம்பிக்கு திருமண பேச்சு நிகழ்ந்ததை அறிந்த மஞ்சு கணவரின் தம்பியுடன் வெளியூர் சென்று விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.
திருமண பேச்சு தொடர்பில் இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தூங்கியுள்ளனர். அதிகாலை மூன்று மணியளவில் மஞ்சுவைக் காணாததால் தேடிய போது குளியலறையில் நிர்வாணமாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
தூக்கிலிருந்து இறக்கி ஆடை அணிவித்து தண்ணீர் தெளித்து பார்த்த போது மஞ்சு உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சடலத்தினை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பிவைத்ததுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.