இளம் யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
வவுனியா மணிபுரம் பகுதியில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா மணிபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான தங்கவேல் திவியா (திவி) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இன்றைய தினம் பெற்றோர் இருவரும் தொழில் நிமித்தமாக வெளியில் சென்ற நிலையில் குறித்த யுவதி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். மதியமளவில் பெற்றோர் வீட்டிற்கு வந்த போது மகள் தூக்கில் தொங்குவதை அவதானித்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் யுவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.