யாழில் வீடொன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு!
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள வீடொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.
கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீட்டினை உரிமையாளர் வேலையாட்களை வைத்து சீரமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த போது வீட்டின் கூரைக்குள் கைக்குண்டு மறைத்து வைக்கப்பட்டிருப்பதனை வேலையாட்கள் அவதானித்துள்ளனர்.
வேலையாட்கள் உரிமையாளரிடம் தெரிவித்ததையடுத்து வீட்டின் உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கோப்பாய் பொலிஸாரால் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.