ரஷ்யாவுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட உக்ரைன் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு தரப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தேசத்துரோக குற்றச்சாட்டில் அவரை தடுத்து வைக்க முயன்றபோது அவர் தப்பிச் செல்ல முயன்றதாகவும், இதன்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யுத்தம் தொடங்கிய பின்னர் பெலாரஸ் எல்லைப் பகுதியில் உக்ரைன்- ரஷ்ய இரண்டு தரப்பும் சந்தித்து பேசி இருந்தனர்.
இந்தச் சந்திப்புகளில் உக்ரைன் தரப்பில் oschadbank இன் முன்னாள் துணைத்தலைவர் டெனிஸ் கிரியேவ் கலந்து கொண்டார்.அவர் உக்ரைன் பற்றிய தகவல்களை ரஷ்யாவிற்கு கசிய விட்ட தாக உக்ரைன் அரச புலனாய்வு நிறுவனம் SBU தெரிவித்துள்ளது.
அதற்கான வலுவான ஆதாரம் இருந்ததாகவும் அவரை தடுத்து வைக்க முயன்றபோது தப்பிச் சென்றதால் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.