ரஷ்யா- உக்ரைன் பேச்சில் சுமூகமான முடிவுகள் இல்லை!
ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கிடையிலான இந்த சந்திப்பில் இருநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர். தொடர்ந்து இனிவரும் நாட்களில் அடுத்த சுற்றுப் பேச்சு தொடர்வதற்கு முன்பாக இரு தரப்பினரும் தத்தமது தாய் நாட்டுக்குச் சென்று திரும்ப முடிவு செய்துள்ளனர் என ராய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய மற்றும் உக்ரைன் தரப்பினரால் உத்தியோகபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் ராய்ட்டர் செய்தி நிறுவனம் மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றைய பேச்சு தொடர்பில் விரிவான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் தகவல்களின்படி முதலில் உக்ரைன் இராணுவத்தினர் உடனடியாகத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை ரஷ்யா தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே உக்ரைன் பகுதியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய படைகள் உக்ரைன் இராணுவத்தின் கடுமையான எதிர்த் தாக்குதலை சந்தித்து வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் உக்ரைனுக்கு கிடைத்தது வருகிறது.
ரஷ்யா உலக நாடுகள் பலவற்றினால் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகி பல நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.