சிறுவன் கொலை தொடர்பில் 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!
ரிக் ரொக் பதிவு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து சிறுவன் ஒருவன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்துள்ளது.
கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் ரிக் ரொக் பதிவு தொடர்பில் இரு குழுவினருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும் இதன் போது 17 வயதான சிறுவன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பட்டனர். அவர்களை எதிர்வரும் 7ம் திகதி வரை சிறுவர் பாதுகாப்பு மையத்தில் தடுத்துவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.