கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் முறையாக புது வருடப் பிறப்பை முன்னிட்டு படகுப் போட்டி!
கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் புது வருடப்பிறப்பை முன்னிட்டு படகுப் போட்டி மற்றும் நீச்சல்ப் போட்டி அக்கராயன் குளத்தின் மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்புற இடம்பெற்றுள்ளது.
அக்கராயன் குளத்தில் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் படகுப் போட்டியில் கலந்து கொண்டனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் படகுப் போட்டி மிகச் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் இடம்பெற்றது.
படகுப் போட்டியைத் தொடர்ந்து நீச்சல் போட்டியும் இடம்பெற்றது. நீச்சல் போட்டி குளத்தின் நடுப்பகுதியிலிருந்து ஆரம்பித்து குளத்தின் கரையில் முடிவடைந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு அக்கராயன் குளத்தின் மீனவ சங்கத்தினரால் வழங்கிவைக்கப்பட்டது.